Tuesday, February 10, 2009

எப்படி நுழைந்தாய்?! என்னுள்ளே?

எப்படி நுழைந்தாய்?! என்னுள்ளே?

நானறியாமல் என்னுள் வந்தாய்..!

நான் காண்கையில் எல்லாம் - ஒரு

பொருட்டாகவே மதிக்காத பார்வை..!

நான் பேசுகையில் எல்லாம் - லகுவாய்

தவிர்க்கும் விதமான பதில்கள்..!

இப்படியே நகர்ந்த வாழ்க்கையில்..

எப்படி நீ என்னுள் நுழைந்தாய்?

 

கல்லூரி சகாக்கள் சிலரிடம் சிற்சில

சண்டைகள் இடுவதும் சகஜமே..!

நான் சண்டை இட்டவர்களிடம் நீ

அடிக்கடி நான் இருக்கும்போதே பேசுவாய், வேண்டுமென்றே..!

நான் முகம்சுளிக்க விலகி நடப்பேன் திரும்பி பார்க்காமல்..!

இப்படியே நகர்ந்த வாழ்க்கையில்..

எப்படி நீ என்னுள் நுழைந்தாய்?

 

சிற்சில நேரம் உனக்கு கணினிக் கடிதங்கள் அனுப்பியதுண்டு..!

அவற்றை பெரிதுபடுத்தி நீ நடந்து கொண்டதாய் நான் அறிந்ததில்லை..!

அவற்றிற்கு நீ அழகாய் பதில் அனுப்பியதாய் ஞாபகமில்லை..!

 

சிற்சில நேரம் உன்னுடன் கணினிக் கதைப்புகள் நடத்தியதுண்டு..!

"ஆம்.. இல்லை.. அப்படியா?.. இருக்கலாம்.. சரி..பார்க்கலாம்" இவை மட்டுமே

நான் வரி வரியாய் அனுப்பிய அத்தனைக்கும் நீ தந்த பதில்கள்..!

இப்படியே நகர்ந்த வாழ்க்கையில்..

எப்படி நீ என்னுள் நுழைந்தாய்?

 

கடைசிநாள் கல்லூரியில்.. பிரிவை பரிமாறும் நாளாம்..!

உன்னோடு சேர்ந்தே இருந்ததில்லை.. பிறகு பிரிவுக்கென்ன வேலை?

இருந்தும் பிரிவு வலித்தது..!

சொல்லாத காதல்.. சொல்லாமலே பிரிய முடிவெடுத்தேன்..!

இதுவரையில் என் நாட்குறிப்பில் நீ.. நினைவுகளில் நீ..!

உன் சரிதத்தில் நான் இருந்ததாய் எந்த அறிகுறியும் இருக்காதென்று..

நான் மெல்ல என்னை தேற்ற முயன்று.. தோற்று கொண்டிருந்தேன்..!

இதயம் அழுது நனைந்த தலையணைகள்.. நீ தெரிந்திருக்க வாய்ப்பில்லை..!

உள்ளே குமுறி வெளியே சிரித்து வெடித்தேன்..!

"நல்ல நடிகன்" என்று என்னை தேற்றிகொண்டிருந்தேன்..!

சொல்லாத காதலின் அந்திய காலத்தில்.. வெளியில் அழுதால்.. அடுத்தவன் சிரிப்பானே! கதவுகள் அடைத்து, குரல் வலிக்க கதறினேன்..!

பிரிவில் நண்பர்கள் மும்மரமாய்.. என் சப்தம் கேட்க வாய்ப்பில்லை..!

 

இப்படியே நகர்ந்த வாழ்க்கையில்..எப்படி நீ நுழைந்தாய்?

 

மெல்ல சிணுங்கிய.. விடுதித் தொலைபேசி..எனக்கு துணைக்கு அழுதது..!

எதிர்பார்ப்புடன் எவனோ எடுத்து.. "வினோ..! ரூம் நம்பர் 83..! போன்.....!" உரக்க கூறிவிட்டு சட சட வென படிகளில் விரைந்தான்.!

 

முகத்தை துடைத்துக்கொண்டு..மாமூல் புன்னகையுடன்.. "எனக்கு யாரு போன் பண்றா?" கேட்டுக்கொண்டே விரைந்தேன். ரிசிவரை எடுத்தேன்.."ஹலோ?"

எதிர்முனையில் பதில் இல்லை.. ஆனால்.. இணைப்பு இன்னும் உயிருடன் இருக்கிறேன் என்று கரகரத்தது..!

 

உள்ளே ஒரு சிணுங்கள்..! புரிந்தது யார் குரலென்று..! சிணுங்கள் அழுகையானது.

கலங்கினேன் நானும்..!

"பிரியா..!!" - தளுதளுக்க அழைத்தேன்.

 

"இப்ப கூட நீ சொல்ல மாட்டேல்ல?!"

கேட்ட தொனியில் அர்த்தம் புரிந்தது..!

 

"பிரியா..!!" - மீண்டும் ஒருமுறை..

 

"ஏன்டா மறைச்சிட்ட? நான் உன்னை பார்க்கனுன்டா" - எத்தனை ஏக்கமாய்.. அந்தக் குரல்.. தேம்பல்கள் மறைக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தாள்.

 

..... பேச நா வராமல்.. மகிழத் தெரியாமல்.. வருந்துகையில் சிரித்த நான்.. மகிழ்வினில் அழுதேன்..! நான் அழுது பார்த்திராத நண்பர்கள், ஆயிரம் கேள்விகள் கேட்டனர்.

 

"பிரியா..! நீ..நீ நீயுமா...!"  - அவள் பெயரைத்தவிர அத்தனை வார்த்தையும் தடுமாறியது.

 

தேம்பல் தழுவ கேட்டாள் "எங்க ஹாஸ்டல் பக்கத்துல இருக்க கோயிலுக்கு.. இப்ப வரியா?"

 

"ம்ம்..!" - மனமின்றி ரிசிவரை வைத்தோம்..!எப்படி நுழைந்தாய்?!

 

நகர்ந்த நாட்கள் அத்தனையும் புதிதாய் மீண்டும் எனக்குள் ஓட ஆரம்பிக்க.. என் கால்களும் விரைந்தன.

Saturday, June 30, 2007

வினோதமாய் நான்!

“வினோத்..! மறந்திராதீங்க, சாயங்காலம் டாக்டரை பார்க்க போறோம்..!” பிரியா சொல்லிக்கொண்டே செருப்பை மாட்ட ஆரம்பித்தாள்.

“ம். நீ நேரா வந்திடுவியா? பிரியா? இல்லை நான் வந்து பிக்கப் பண்ணிக்கவா?” இது வினோத், நான் தான்.

“இல்லை வினோ! எனக்கு இன்னைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. ஹாஸ்பிடல் பக்கத்துல தான். சோ, நான் அந்த ஏரியாவுல தான் இருப்பேன். நடந்தே வந்துடரேன். நீங்க ஒழுங்கா வந்து சேருங்க..!!” எனக்கே எனக்காய் ஒரு புன்னகை, ஒரு முத்தம் .. பிரியா கிளம்பினாள்.

நான் மெல்ல எழுந்து, சாவகாசமாய் குளித்து, கிளம்பி, ஸ்ப்ளெண்டரை ஸ்டார்ட் செய்த போது மணி 10.00. “இரவு 11 மணிவரை ஆபீஸில் இருந்துவிட்டு, காலையிலேயும் சீக்கிரம் கிளம்பனுமா? கொடுக்கற காசுக்கு நடிச்சா போதும்டா வினோ..!” எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.

ட்ராபிக் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.

என்னைப்ப்ற்றி சொல்லவில்லையோ?! நான் வினோத். பலர் மதிப்பிற்கும், பொறாமைக்கும் ஆளாகும் சாப்ட்வேர் இஞ்சினியர்களில் நானும் ஒருவன். 6 வருடம் ஆகிறது, நான் பெங்களூர் வந்து. இப்ப நான் ப்ரோஜெக்ட் மேனேஜர். இந்த ஆறு வருடத்தில், மூளை வளர்ந்தது குறைவு, சம்பளம் உயர்ந்தது அதிகம். நான் பெருமைப்படும் ஒரே நல்ல விஷயம், அப்பப்ப நானும் எக்ஸசைஸ் பண்றேன் பேர்வழி என்று கொஞ்சம் நல்லா, தொப்பை கிப்பை எதுவும் இல்லாம இருக்கறதுதான்.

எங்க காலணியிலேயே நமக்கு டிமாண்ட் ஜாஸ்தி. அப்படி ப்ரோபோஸ் பண்ணினதுல ஒருத்தி தான் நம்ம பிரியா. இப்ப அவ மிஸஸ்.வினோத். பார்த்தவுடனேயே புடிச்சது. தயங்கி தயங்கி வந்து சொன்னாள்.


“ம். எனக்கும் பிடிச்சிருக்கு. ஆனா இன்னும் ஒரு 3 மாதம் பழகிப்பார்க்கலாம். அப்பவும் ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா, கல்யாணம் பண்ணிக்கலாம்” - இது தான் நான் சொன்ன பதில்.

ஒரு வித புதிராய் என்னை பார்த்து சிரித்துவிட்டு, “சரி” என்றாள் பிரியா.

அந்த சிரிப்பை, அந்த பார்வையை உயிருள்ளவரை மறக்கமுடியாது, என்னால்.

பிடிச்சிருந்தது. இந்த 12ம் தேதி வந்தால் மூணு மாசம். இன்னைக்கு கூட நல்ல செய்தி எதிர்பார்க்கிறேன். அதற்க்கும் சேர்த்து, என்னையும் டாக்டர்கிட்ட காட்டணும். அதற்க்குத்தான் ஈவ்னிங் போகனும்.

அப்புறம், நான் கொஞ்சம் ஹேண்ட்சம், ஆனா ரொம்ப ஸாப்ட்டான ஆளு. அதனால் எங்க வீட்ல மதுரை ஆட்சிதான். அட..! பேச்சுவாக்குல ஆபிஸ் ரொம்ப சீக்கிரம் வந்துடுச்சே..!

உள்ளே போனேன். கொஞ்ச நேரம் ஈ-மெயில் பார்த்தேன். எதிர்பார்த்த எந்த மெயிலும் வரவில்லை. நிம்மதி. இன்னைக்கு பெருசா எதுவும் வேலை இல்லை. அப்படி இப்படி ரிப்ளை அனுப்பி, பார்வட் பண்ணி, கொஞ்சம் நெட்டி எடுத்தேன். மணி 12:50.

“ஊடாகே ஓகேனா?” ரகுவின் குரல் கேட்டு திரும்பினேன்.

“ஓகே. ஸேல் வி ஸ்டார்ட் நௌ?” அங்கங்கே ஒவ்வொரு க்யூபிகளிலிருந்தும் ஆள் சேர்த்து, நிதானமாய் நடந்தோம்.

நல்ல சாப்பாடு. ஆபீஸ் தயவில், வெறும் 15 ரூபாய்க்கு நன்றாக வயிறு நிரம்பியது.


திரும்ப மீண்டும் அதே லேப்டாப் ...... அதே அவுட்லுக் ...... ஈமெயில் ......
மெல்ல நிதானித்து மணியை பார்த்தேன். மூன்றுக்கும் நான்குக்கும் நடுவே சின்னமுள் சோம்பல் முறித்தது! கொஞ்ச நேரம் orkut கொஞ்சம் gtalk chat என்று நேரம் கடத்தினேன். சட்டென அவுட்லுக் விழித்துக்கொண்டு "டிங்" என்று reminder window-வை தள்ளியது.

"Meet Doctor, with Priya"

ஒரு வாரம் முன்பே வாங்கிய appointment. ப்ரியாவுக்கு பயந்து ரிமைன்டர் செட் பண்ணியிருந்தேன்.

மணி 5:00 pm.

நான் hospital-ஐ நோக்கி வண்டியை செலுத்தினேன். திருமணமானாலே வேகம் குறைந்து தான் விடுகிறது. Pulsar-ல் 80, 90 -களில் சாதாரணமாக பயணித்த நான் இப்போது 40-ஐ தாண்டாமல் நிதானமாய்..பயணிக்கிறேன். ப்ரியாதான் காரணமோ? இல்லை பொறுப்பு வந்து விட்டதோ?

மணி 5:30pm.

நான் ஹாஸ்பிட்டலில் காலடி வைத்ததும், ரிசெப்சனில் இருந்த பெரிய கடிகாரம் இரண்டு முறை ஓசை எழுப்பியது.

"வாங்க! வாங்க!" - இது ரிசெப்செனிஷ்ட் தேவி. நம்ம ப்ளாட்ல தான் இருக்கா!. அவளுக்கும் நம்ம மேல ஒரு "இது".

"How are you doing, Devi!" - நானும் US-return என்கிற ரேஞ்சுக்கு கேட்டேன்.

அவளின் கன்னக்குழிகூட சிரித்தது..!

"Doing Great, Vino! 9th floor, right side, 3rd room, no#928."
"நீங்க தான் முதல் பேஷண்ட், டாக்டர் வெயிட் பண்ணிட்டு இருப்பார்".

"பிரியா வந்துட்டாளா? பார்த்தீங்களா?"

"oh..Your wife! That lucky girl..! She just arrived, she must be waiting there" - கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் பொறாமை தெரிய பதில் வந்தது.

நான் வேகமாய் லிஃப்ட் நோக்கி நகர்ந்தேன். 9th floor என்பதால் லிஃப்ட், ஒரு நாலு ஃப்ளொர் அப்படின்னா படியில் நடந்தே போய் விடுவேன். அது நம்ம பழக்கம். சென்ற வேகத்திற்கு UP-Arrow பட்டனை அழுத்தினேன். அது மஞ்சளாய் கண்ணடித்தது.

லிஃப்ட் பேஸ்மென்டிலிருந்து வந்துகொண்டு இருந்தது. கார் பார்க்கிங் அங்கு தான் உள்ளது. இன்று டூ-வீலரில் வந்ததால் க்ரவுண்ட் ஃப்ளொரிலேயே பார்க் பண்ண முடிந்தது.

லிஃப்ட் வரும்போதே மனதுக்குள் கொஞ்சமாய் குறுகுறுத்தது "உள்ளே ஒரு அழகான பொண்ணு இருந்தா எப்படி இருக்கும்?"

மஞ்சள் பட்டன் கண்ணடிப்பதை நிறுத்தி எனை முறைத்து அணைந்தது. கதவுகள் மெல்ல திறந்தன.

"ஆஹா! செக்கச்செவேலென ஒருத்தி, சிகப்பு சுடிதார். பார்த்ததும் மயக்கும் விழி! எதிர்பார்க்கவேயில்லை இவ்வளவு அழகை!".

சட்டென காலை பார்த்தேன். மெட்டி இல்லை. நிச்சயம் திருமணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை. சின்னதாய் ஒரு ஞாபகம்.. பிரியா கண்முன் வந்தாள். நானும் நல்லவன் என்பதாய் உள்ளே போனேன். 9th floor.. தேடினேன்.. அவளும் 9th floor-தான். ஏற்கனவே அந்த 9 மஞ்சளாய் சொக்கிக்கொண்டிருந்தது.

ஓரக்கண்ணால் மெல்ல அவளை பார்த்தேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் உதடுகள் சிவந்தன, முகம் சிவந்தது, அவளை அறியாமல் உதடுகள் கடிபட்டன. அவளுக்கு என்மீது ஈர்ப்பு என்பது உறுதியானது.

அவள் கட்டுப்படுத்த முடியாமல் உதடுகள் துடித்தன. வெட்கம் கூடிய எதிர்பார்ப்பு. நானும் தூண்டப்பட்டேன். "அப்படியே உதட்டோடு உதடாக ஒரு ம்ம் முத்தம், முழு இதழ்ச்சாரையும் உறிஞ்சு" என்பதாய் ஒரு தூண்டல். மீண்டும் பிரியா கண்முன் வந்தாள். சில அங்குலங்கள் அவளை விட்டு நகர்ந்து நின்றேன்.

ஆனால் அவள் சட்டென்று எனை நெருங்கி வந்தாள். "நான் மோகனா! Your good name?!"

"வினோத்". இனம்புரியாத ஒரு சிரிப்பை உதிர்த்தேன். எனக்கு உண்டான மோகத்தை நிச்சயம் உணர்ந்திருப்பாள்.

மிக அருகில் அவள், கட்டியணைத்தாள். உதட்டில் நச்சென ஒரு முத்தம். லேசாக கடித்தாள்.
சில நொடிகள் இதழ்களில் மட்டும் உரையாடல். நான் கட்டுப்பாடு இழந்தேன். மீண்டும் பிரியா கண்முன் நிழலாடினாள். அவள் கைகளை விலக்கி, "நான் திருமணமானவன்" என்றேன், மிக மெதுவாக.

"அதனால் என்ன?", சொல்லிக்கொண்டே என் காதுகளை பற்களால் வருடினாள்!
"வாங்க.. எபோனி ஹோட்டல் போகலாம்!" -- என் பதிலுக்கு எதிர்பார்த்தவளாக தெரியவில்லை. நான் எந்திரமாய் அவளை பின்தொடர்ந்தேன். செல்ல நாய் போல அவள் கரங்களில் நான். பிரியா?! மறந்து போனது!

"Ebony..M.G Road, Barton Center, 13th floor.." - இடையிடையே ஒலித்த சில குரல்கள்.

புகை சூழ்ந்த இடம்! மங்கலான வெளிச்சம்! அங்கங்கே மதுக்கிண்ணங்கள்! சில கண்ணாடி பாஷைகள்! மகளிருக்கு அங்கே 50 சதத்துக்கும் மேலே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது!

"Hot or Cold, Vino?!"
"As you wish, sweety" - இது நான்!

சில மணி நேரம், பலவித போதை! உரசல்கள், உதட்டு முத்தங்கள், தழுவல்கள், சல்லாப சப்தங்கள், உணரல்கள், .....அத்தனையும் சாத்தியமானது! அதற்காகவே ஒதுக்கப்பட்டதாய் அந்த டேபிள்!

"Would you like to spend the rest of the evening with me? Shall we proceed to my room? Have a note of my mobile number, Handsome!" - சொல்லிக்கொண்டே அவளது மொபைலை நீட்டினாள்.

அனிச்சையாய் அவளது நம்பர் எண் செல்லுக்கு குடிபெயர்ந்து கொண்டது.

சரம்சரமாய் பேசினாள்! எனக்கு யாரோ புல்லாங்குழல் இசைப்பதாய் கேட்டது! மீண்டும் அனிச்சையாய் எண் செல்லிலிருந்து அவள் மொபைலுக்கு ஒரு கால் போனது..!

"வசீ..கரா..! என் நெஞ்சினிக்க..." - அவளது ரிங்க்டோன். சிரித்து என் கரங்களோடு மொபைலை முத்தமிட்டாள். வெளியே வந்தோம்! 13th floor, lift-ன் முன் நின்று கொண்டிருந்தோம்.

"9th floor, 3rd room on the right is my room, shall we...?" - இது மோகனாவின் இசை!

"9th floor, 3rd room on the right..!" - பளீரென்று எனக்குள் மணியடித்தது. "பிரியா?!!" இன்னும் ஹாஸ்பிட்டலில் இருப்பாளா? இல்லை கிளம்பியிருப்பாளா?!"

வேகமாய் வெளியேறினேன். "sorry, I got to go .Miss..." அவள் பெயர் மறந்து போனது! பிரியா மட்டும் நினைவில்.

அடுத்த இருபதாவது நிமிடம் நான் ஹாஸ்பிட்டலில். லிஃப்ட்-ஐ நோக்கி வேகமாக நடந்தேன். லிஃப்ட் திறந்து இருப்பது தெரிந்தது. ரிசெப்ஷனில் இருந்து தேவி ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தாள். லிஃப்ட் மூடி விடுவதற்குள் போகவேண்டும் என்று ஓடினேன்!

"Lift is not working properly. It shuts very fast. It may severly injure..!" - தேவி சொல்லியது காதுகளில் விழவில்லை..!

"நில்லுங்க Mr. வினோத்! Mr. வினோத்! ...." - காதுகளில் விழுந்த சப்தம் மூளையை சேர்வதற்குள், நான் லிஃப்ட் கதவுகளில் நுழைய ஆரம்பித்தேன்..!

"ச்ச்ச்ச்ஸ்... சர்ர்ர்ட்......"

இதுவரை எனக்காகவே காத்திருந்தது போல, இரையை கவ்வும் முதலையாய் என்னை கடித்தது லிஃப்ட்!

என்ன நடந்தது? நடக்கிறது? எதுவும் விளங்கவில்லை! கடைசியாய் நான் இட்ட சப்தம்.. "ப்ரியா..!" .. அது மட்டும் லிஃப்ட்-ன் சுவர்களில் மோதி மீண்டும் மீண்டும் எதிரொளித்துக்கொண்டு இருந்தது.

என் கண்கள் மூடியே இருந்தன.

லிஃப்ட் கதவுகள் திறக்கப்பட்டன. சத்தம் கேட்டு பிரியா ஓடி வந்தாள். நான் இன்னும் கண்களை திறக்கவில்லை. கைத்தாங்கலாக என்னை நடத்தி சென்றாள், என்னால் உணர முடிந்தது.

"9th floor, 3rd room on the right..!" - ஸ்ட்ரெட்சரில் படுத்து இருந்தேன்.
"பிரியா! என்னை மன்னிச்சிடுடா! கொஞ்ச நேரத்துல உனக்கு துரோகம் பண்ண பார்த்தேன்!" - கண்கள் குளமாக நான் அழுதேன்!

"Don't worry Dear! I trust you. Calm down, calm down!"

டாக்டர் வந்தார். "சாரி பிரியா! திடீர்னு ஒரு emergency case, sorry for the delay"
"என்ன ப்ராப்ளம்! வினோத்?!" - கேட்டது எனக்கும்.

"டாக்டர்! இவர் முழிச்சிட்டு இருக்கும்போதே கனவு காண்றார்! அதை நிஜம்னு நினைச்சு ரியலா ரியாக்ட் பண்றார், டாக்டர்!"

"பிரியா! நான் பொளச்சிடுவேனா?, ரொம்ப ப்ளட்-லாஸ் ஆயிடுச்சா?! - கேட்டது நான்.

"வினோ! வேக் அப்! வேக் அப்!" - யாரோ எழுப்புவதாக உணர்ந்தேன். கண்விழித்தேன்!

"பாருங்க! இப்ப லிஃப்ட்ல கூட ஏதோ கனவு கண்டிருக்கார்! ஆனா தூங்கலே. இவர் சத்தம் கேட்டு ஓடினா, கண்ணை மூடிக்கிட்டு ஏதேதோ பொலம்பறார்", என்றாள் பிரியா.

"Don't worry. I know what it is..!"
"vino, make your self comfortable"
"இங்க வந்து உட்காருங்க..!" - என்றார் டாக்டரும் என் நண்பருமான சீனிவாசன்.

நிதானமாய் எழுந்து, ஒன்றும் புரியாமல், அந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

சுற்றும் முற்றும் பார்த்தேன்!

வாசலில், மோகனா என்னை பார்த்துக்கொண்டு இருந்தாள். மீண்டும் குழம்பினேன்!

"அடுத்து நீங்க தான், வித்யா! உள்ளே போங்க!" என்று அட்டெண்டர் மோகனாவிடம் சொன்னார்.

எனக்கு புரிந்து விட்டது..!